“இனி இதற்கு கூடுதல் அபதாரம்”….. மாவட்ட ஆட்சியர் திடீர் எச்சரிக்கை….!!!

வட இந்தியாவில் செந்தூரப்பூ மரம் உள்ளது. ஆனால் தமிழகத்தில் செந்தூரப்பூ மரம் இல்லை. இதனை அறிந்த சத்திஷ்கர் மாநிலத்தில் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை செயலர் டாக்டர் பிரசன்னா அவர்களின் தீவிர முயற்சியால் விதைகள் மூலம் தமிழகத்தில் வளர்க்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மரம் அறக்கட்டளை, தண்ணீர் அமைப்பு, பசுமை சிகரம் அறக்கட்டளை சார்பில் தமிழகத்தில் முதல் செந்தூரப்பூ மரம் திருச்சி கல்லுக்குழி ரயில்வே காலனியில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் வளாகத்தில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் செந்தூரப்பூ மரத்தை அறிமுகப்படுத்தி நடும் பணியை தொடங்கி வைத்தார்.அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர், பொதுவாக வன வளங்களின் பரப்பு 33% குறைவாக உள்ளது. ஆனால் திருச்சியில் 10% குறைவாக உள்ளது. திருச்சி பொறுத்தவரை முக்கிய தாவரங்கள் அழிந்து வருகிறது.

இதனை கருத்தில் கொண்டு அவைகளை பாதுகாப்பதற்காக இன்று திருக்கோயிலில் அரிய வகை மரமான செந்தூரப்பூ மரம் தமிழகத்தில் முதன்முறையாக இங்கு நடப்பட்டுள்ளது. திருச்சியில் அதிகப்படியான இடங்களை கண்டறிந்து மியாவாக்கி காடுகள் வளர்க்கும் பணி நடைபெற்று வருகிறது. நகர பகுதிகளில் காடுகள் வளர்ப்பை மேம்படுத்தும் வகையில் மியாவாக்கி காடுகள் அறிமுகப்படுத்தப்படும். அதனை தொடர்ந்து கொரோனா மாவட்டம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தற்போது கொரோனா தொற்றால் 440 பேர் சிகிச்சை பெற்று வருகின்றன. இதனால் பொதுமக்கள் அவசிய முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். நிறுவனங்களுக்கு வரும் பொதுமக்கள் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும் என்று வலியுறுத்தப்பட வேண்டும். தற்போது முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. மேலும் இது கூடுதல் ஆனால் அவதாரம் கூடுதலாக விதிக்கப்படும். எனவே பொதுமக்கள் ஒத்துழைப்பு அவசியம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *