பெங்களூரு, மும்பை, டெல்லி, சென்னை போன்ற மாநகரங்கள் ஒவ்வொன்றிலும் போக்குவரத்து நெருக்கடி அதிகமாக இருக்கிறது. இன்றளவும்இது  தீராத ஒரு பிரச்சினையாக உள்ள நிலையில்  பெரும்பாலும் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மெட்ரோ நகரங்களில் போக்குவரத்து நெரிசலுக்கு எப்போதுமே பஞ்சம் கிடையாது. அப்படிப்பட்ட போக்குவரத்து நெரிசலின்  போது ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் போன்ற அவசர ஊதிகளுக்கு கூட சில சமயங்களில் வழி கிடைக்காமல் போகிறது.

சைரன் ஒலியை காதில் வாங்காமல் தொடர்ந்து வாகனத்தை இயக்குபவர்கள் இருந்து கொண்டு தான் இருக்கிறார்கள் . இது போன்ற விதிமுறைகளை கட்டுப்படுத்தவும் அவசர சேவைகள் தடை இன்று கிடைப்பதை உறுதி செய்யவும் மிக கடுமையான நடவடிக்கையை மத்திய மாநில அரசுகள் எடுத்து வருகிறது . அதன்படி ஆம்புலன்ஸ் ,தீயணைப்பு வாகனங்கள் போன்ற அவசர ஊர்திகளுக்கு வழி விடாவிட்டால் பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. சாலை ஓரங்களில் வைக்கப்படும் சிசிடிவி கேமராக்கள் மூலம் இந்த குற்றங்கள் உறுதி செய்யப்பட்டு அதன் பிறகு அபராதங்கள் விதிக்கப்படுகிறது.