“இனி ஆட்டம் வேற மாதிரி” தேர்தல் ஆணையத்தை நாடிய OPS….. அப்செட் மூடில் எடப்பாடி….!!!!

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் சூடுபிடித்துள்ளது. அதிமுகவில் பெரும் பரபரப்பு நிலவி வரும் சூழலில் நேற்று அதிமுக பொதுக்குழு கூடியது. இந்த பொதுக்குழு கூட்டம் அடுத்த மாதம் 11ஆம் தேதி மீண்டும் கூடும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு ஓ.பன்னீர்செல்வம் தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்து பொதுக் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தது. இந்நிலையில் பொதுக்குழுவை புறக்கணித்துவிட்டு டெல்லி சென்ற ஓபிஸ் தரப்பு தேர்தல் ஆணையத்தை நாடியுள்ளது.

இந்த விவகாரத்தை தேர்தல் ஆணையம் கையில் எடுத்தால் 11ஆம் தேதி நடைபெற உள்ள பொது குழுவுக்கு தடை, அதிமுக சின்னம், இரட்டை இலை முடக்கப்படும் என்று கூறப்படுகிறது. இதனால் இபிஎஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் சட்ட வல்லுனர்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இனி இருவரின் ஆட்டமும் வேற மாதிரி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.