“இனி அவங்க, இவங்க” இதெல்லாம் கிடையாது …. புது கணக்கு போடும் ஓபிஎஸ்…!!!!

சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பையடுத்து ஓபிஎஸ் ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், அதிமுகவை எம்ஜிஆர் அவர்கள் தொண்டர்கள் இயக்கமாக உருவாக்கினார். ஜெயலலிதா மக்கள் இயக்கமாக மாற்றினார். இதை யாராலும் வெல்ல முடியாது. எம்ஜிஆர் 10 வருட காலம் ஜெயலலிதா 16 வருட காலம் நல்லாட்சி வழங்கினார்கள். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக அதிமுகவில் அசாதாரண சூழல் நிலவி வந்த நிலையில் தற்போது இந்த விவகாரத்தில் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை உயர்நீதிமன்றம் வழங்கி உள்ளது.

இதனை ஒன்றரை கோடி அதிமுக தொண்டர்களுக்கு காணிக்கை அளிக்கிறோம். தொண்டர்கள் விரும்பியது தற்போது நடந்து கொண்டிருக்கிறது. ஏனெனில் இது தொண்டர்களுக்கான இயக்கம். இந்த இயக்கத்தை சர்வாதிகாரமோ, தனிநபரோ, ஒரு குடும்பமோ கொண்டு செல்ல நினைத்தால் அது நடக்காது என்பதை உணர்த்தும் விதமாக இன்று தீர்ப்பு அமைந்திருக்கிறது. இது முழுமையாக நமக்கு கிடைத்து முழு வெற்றி. அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்