மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை அண்மையில் அரசு அறிவித்தது. இதையடுத்து பல மாநில அரசுகள் அகவிலைப்படியை உயர்த்தி அறிவித்தது. எனினும் மேற்கு வங்கத்தில் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படாது என்று முதல்வர் மறுப்பு தெரிவித்தார். இந்த நிலையில் அரசுக்கு எதிராக ஊழியர்கள் போராட்டம் நடத்தினர். இப்போராட்டம் 100 நாட்கள் நடந்த நிலையில், முதலமைச்சர் மம்தா பானர்ஜி இல்லம் அருகில் அரசு ஊழியர்களின் கூட்டமைப்பு மாபெரும் பேரணிக்கு மே 6ம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டது.
இது தொடர்பாக முதல்வர் அளித்த விளக்கத்தில், அரசாங்கத்தால் எவ்வளவு அகவிலைப்படி அதிகரிக்க முடியுமோ அவ்வளவு உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு மேலாக உயர்த்த அரசுக்கு திறனில்லை. நிதி அமைச்சர் அண்மையில் அகவிலைப்படியை 3% உயர்த்தி பட்ஜெட்டில் அறிவித்தார். அதோடு அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி அடிப்படை சம்பளத்தில் 6 சதவீதமாக உள்ளதாக தெரிவித்து உள்ளார்.