மருத்துவ காப்பீடுகளை எடுப்பதற்கான வயது வரம்பை இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் நீக்கியுள்ளது. நாட்டில் மருத்துவ காப்பீடுகளை எடுப்பதற்கான வயது வரம்பு 65 ஆக இருந்தது. வயது வரம்பு நீக்கப்பட்டுள்ளதால் இனி அனைத்து வயதினரும் மருத்துவ காப்பீடு எடுத்துக் கொள்ளலாம். கடுமையான நோயால் பாதிக்கப்பட்டோருக்கு சிறப்பு காப்பீட்டு திட்டங்களை செயல்படுத்தவும் ஐ ஆர் டி ஏ அறிவுறுத்தியுள்ளது.