தமிழக போக்குவரத்துத் துறையானது மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு அரசுப்பேருந்துகளில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் இயற்கை எரிவாயு மூலமாக இயங்கும் ஆறு  அரசு பேருந்துகளை போக்குவரத்து துறை அமைச்சரான சிவசங்கர் இன்று தொடங்கி வைத்தார் .

அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், இனிவரும் நாட்களில் அனைத்து பேருந்துகளுமே டீசலுக்கு பதிலாக இயற்கை எரிவாயு பயன்படுத்தப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் அரசுக்கு ஏற்படும்  செலவினங்களை குறைக்கும் விதமாக  16 CNG, 4 LNG  அரசு பேருந்துகளும் சோதனை முறையில் இயக்கப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளார்.