இனிமே எவனும் தொட மாட்டான்…பெண்களை தொட்டால் ஷாக் அடிக்கும்… தஞ்சை பொறியாளர் புதிய கண்டுபிடிப்பு…!!!

தஞ்சாவூரை சேர்ந்த பொறியாளர் ஒருவர் பெண்களைத் தொட்டால் ஷாக்கடிக்கும் செருப்பை கண்டுபிடித்துள்ளார்.

தஞ்சாவூரை சேர்ந்த இளம் பொறியாளர் அமிர்தகணேஷ் என்பவர் சிறுசிறு பயனுள்ள பொருட்களை கண்டறிவது மிகவும் ஆர்வம் கொண்டவர். அவர் பெண்களை பாலியல் வன்புணர்வு செய்யும் நோக்கத்துடன் கொடுப்பவர்களை ஷாக் அடிக்க வைக்கும் வகையில் செருப்பு கண்டுபிடித்துள்ளார். தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி ரகுமான் தெருவில் இன்ஜினியர் அமிர்த கணேஷ் (34) வசித்து வருகிறார். அவர் கடந்த 2008 ஆம் ஆண்டு எலக்ட்ரானிக் கம்யூனிகேஷன் படித்து முடித்தார்.

அதன்பிறகு வேளாண், மீன் வளர்ப்பு மற்றும் மருத்துவம் என 600 வகையான சிறு சிறு பொருட்களை கண்டறிந்துள்ளார். கழிவுநீர் தொட்டி, தொழிற்சாலை கிடங்குகளில் விஷவாயு இருப்பதை அறியாமல் சுத்தம் செய்ய இறங்கிய தொழிலாளர்கள் இறக்கிறார்கள். அதற்கு தீர்வு காணும் வகையில் விஷவாயு உறிஞ்சும் கண்டறியும் கருவி கண்டுபிடித்துள்ளார். அவர் தற்போது தனியாக செல்லும் பெண்களின் பாதுகாப்பிற்காக நிர்பயா செருப்பு ஒன்றை உருவாக்கியுள்ளார்.

அந்த செருப்பில் சென்சார் மற்றும் மைக்ரோ பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. பெண்கள் வழக்கத்தைவிட வேகமாக நடந்தாலோ அல்லது ஓடினாலோ செருப்பில் உள்ள சென்சார் 200 மீட்டர் சுற்றளவிற்கு ஒலி ஏற்படுத்தும். அதில் மின்சாரம் உற்பத்தியாகி எதிரே உள்ளவரை மிதித்தால் எதிரிக்கு எலக்ட்ரிக் ஷாக் அடிக்கும். அவரின் இந்த கண்டுபிடிப்பு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *