இந்த வெயிலுக்கு இது தான் நல்லா இருக்கும்..! விரும்பி சாப்பிடும் பொதுமக்கள்… விற்பனை அமோகம்..!!

வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுவதால் தர்பூசணி, இளநீர், நுங்கு ஆகியவற்றின் விற்பனை திண்டுக்கல்லில் தற்போது சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.

திண்டுக்கல்லில் வெயிலின் தாக்கம் கடந்த சில வாரங்களாக அதிகரித்து காணப்படுகிறது. இதனால் தர்பூசணி, இளநீர், நுங்கு ஆகியவற்றின் விற்பனை திண்டுக்கல்லில் தற்போது சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. இதில் பொதுமக்கள் தர்பூசணி பழத்தில் நீர்ச்சத்து அதிகமாக காணப்படுவதால் தர்பூசணி பழங்களையே அதிகமாக விரும்பி வாங்கி சாப்பிடுகின்றனர். தர்பூசணி பழங்கள் திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து விற்பனைக்காக திண்டுக்கல்லுக்கு கொண்டு வரப்படுகிறது.

இந்த பழங்கள் ஒரு துண்டு ரூ.10-க்கும், ஒரு கிலோ ரூ. 20-க்கும் விற்பனை செய்யபடுகிறது. இந்த பழங்கள் கோடை வெயிலின் சூட்டை தணித்து குளுமையை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாக இந்த பழங்களை சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இதனால் இந்த பழங்களின் விற்பனையும் அமோகமாக நடைபெற்று வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *