இந்த வருடம் தீபாவளிக்கு புதுவகையான பட்டாசு…. அதுவும் ஸ்பெஷல்…. என்னன்னு நீங்களே பாருங்க….!!!

சிவகாசி பட்டாசு கடைகளில் டின் பீர் வடிவத்தில் தயாரிக்கப்பட்ட பவுண்டேன் பட்டாசுகள் மது பிரியர்களை மகிழ்ச்சி படுத்தியுள்ளது. தீபாவளி பண்டிகைக்கு 20 நாட்கள் உள்ள நிலையில் சிவகாசியில் பட்டாசு விற்பனை களைகட்டி வருகிறது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டாசு கடைகளில் விற்பனை நடைபெற்று வருகிறது. வாடிக்கையாளர்களை கவரும் விதமாக பட்டாசுகள் அணி வகுத்துள்ளது.

சில பட்டாசு கடைகளில் பார்த்தவுடனே பீர் டின்னா என்று கேட்கும் அளவிற்கு ஏராளமான டின் பவுண்டேன்  பட்டாசுகள் வைக்கப்பட்டுள்ளது. இந்த வகை பட்டாசுகளுக்கு முன்னணி நிறுவனங்களின் பெயர்களை சில எழுத்து மாறுதல்களுடன் வைத்துள்ளார்கள். வாடிக்கையாளர்கள் பார்த்தவுடன் புதியதாய் தோன்றும் இந்த பட்டாசுகள் பூச்சட்டி ரகத்தில் செய்யப்பட்டுள்ளது.

பீர் டின் போன்று மேலே ஓப்பன் செய்து அதில் உள்ள திரியை பற்ற வைத்தால் 15 அடி வரை உயரே சென்று பச்சை, மஞ்சள், சிவப்பு, வண்ணங்களில் பொறிப்பொறிய் பீறிட்டு மினுமினுக்கிறது. இவை மது பிரியர்களை கவரும் வண்ணமாக இந்தப் பட்டாசுகள் உருவாக்கப்பட்டுள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *