இந்த வயசுல இதெல்லாம் தேவையா…. வசமாக சிக்கிய முதியவர்…. கைது செய்த காவல்துறையினர்….!!

மதுரையில் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவல்துறையினர் மது விற்ற முதியவரை கைது செய்தனர்.

தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனால் தேர்தல் குழு பணம் பட்டுவாடா போன்ற சட்டத்திற்கு புறம்பான செயல்கள் நடைபெறாமலிருக்க அனைத்து பகுதிகளிலும் பறக்கும் படையினரையும், கண்காணிப்பு குழுவையும் நியமித்தது. இதனால் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருதோடு மட்டுமல்லாமல் ரோந்து பணியிலும் ஈடுபடுகின்றனர்.

அந்த வகையில் மதுரை மாவட்டம் சேடப்பட்டியில் இருக்கும் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சென்னம்பட்டியில் வசித்துவரும் ராஜு என்ற முதியவர் சேடப்பட்டியில் மது விற்பனை செய்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளது . இதனையடுத்து  அவரை கைது செய்த காவல்துறையினர் அவர்  வைத்திருந்த 12 மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.