இந்த மாவட்டத்தில் ஜனவரி 27ஆம் தேதி உள்ளூர் விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!!!

தமிழகத்தில் மிகவும் பிரபலமான கோவில்களில் ஒன்றான பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவிலில் தை மாதம் முழுவதும் பொதுமக்கள் கூட்டம் அலைமோதும். அதேசமயம் இந்த ஆண்டு குடமுழுக்கு நடைபெற உள்ளதால் 12 வருடங்களுக்கு ஒரு முறை நடத்தப்பட வேண்டிய கும்பாபிஷேகம் பழனியில் வருகின்ற ஜனவரி 27ஆம் தேதி நடைபெற உள்ளது.

இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் மும்முரமாக செய்யப்பட்டு வரும் நிலையில் இந்த நிகழ்வை முன்னிட்டு வருகின்ற ஜனவரி 27ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகள் போன்ற கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் அனைத்திற்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக பிப்ரவரி 25ஆம் தேதி 14 ஆக இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply