தமிழகத்தில் தேவர் குல வேளாளர் கூட்டமைப்பின் நிறுவனர் பசுபதி பாண்டியன் அவர்களது நினைவு தினம் வருடம் தோறும் ஜனவரி 10ஆம் தேதி அனுசரிக்கப்பட்டு வருகின்றது. இவரை நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் இவரின் திருவுருவப்படத்திற்கு முக்கிய தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் மரியாதை செலுத்துவது வழக்கம். அந்த நேரத்தில் அசமாவிட நிகழ்வுகள் எதுவும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் ஜனவரி 10ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மதுபான கடைகளை மூடுவதற்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார்.

டாஸ்மாக் கடைகளுடன் இணைந்து அனைத்து பார்களையும் மூட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். இந்த தடை உத்தரவை மீறி மது விற்பனையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மதுபானத்தை இடம் மாற்றுதல் மற்றும் பதுக்கி வைத்தல் போன்ற செயல்களில் ஈடுபடுவோர் கண்டறியப்பட்டால் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.