இந்த மாதிரியும் நேர்த்திக்கடன் செலுத்தலாமா…. பங்குனி உத்திர திருவிழா சிறப்பு…. பழனிக்கு திரண்ட திரளான பக்தர்கள்….!!

சேலத்திலிருந்து சில பக்தர்கள் பறவைக்காவடி மூலமாக பழனியிலிருக்கும் முருகன் கோவிலுக்கு வந்தனர்.

மதுரை மாவட்டம் பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் அனைவரும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்துவது வழக்கம். இந்த திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பழனி முருகன் கோவிலில் அமைந்திருக்கும் மூலவரை தரிசனம் செய்வார்கள்.

அதேபோல் இந்த ஆண்டும் பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் அனைவரும் காவடி எடுத்தும், அழகு குத்தியும், பாதயாத்திரை வந்தும் தங்களது நேர்த்திகடனை முருகனுக்கு செலுத்தினர். இதனையடுத்து தற்போதும் சேலத்திலிருந்து சுமார் 50 க்கும் மேற்பட்டோர் பழனி முருகனை தரிசிக்க பாதயாத்திரையாக வந்தனர். இதில் 5 பேர் ராட்சத கிரேன் மூலம் பறவை காவடியாக பழனி முருகனை தரிசிக்க கிரி வீதி வழியாக வந்துள்ளார்கள்.