இந்த மாதத்தில் வங்கிகளுக்கு…. எத்தனை நாட்கள் விடுமுறை தெரியுமா….? வெளியான முழு பட்டியல்…!!!!

ரிசர்வ் வங்கி ஒவ்வொரு மாதமும் வங்கி விடுமுறையின் பட்டியலை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் வரும் டிசம்பர் மாதத்திற்கான வங்கி விடுமுறை பட்டியல் இன்று வெளியாகியுள்ளது. இதில் டிசம்பர் மாதத்தில் 12 நாட்கள் வங்கி விடுமுறை அளிக்கப்படும் என் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி டிசம்பர் 4 (ஞாயிறு), டிசம்பர் 10 ( 2வது சனிக்கிழமை), டிசம்பர் 11 (ஞாயிறு), டிசம்பர் 24 (4வது சனிக்கிழமை), டிசம்பர் 25 (ஞாயிறு) என விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதைத்தவிர மாநில அளவில் கொண்டாடப்படும் விழாக்களுக்காக சிறப்பு விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி டிசம்பர் 3 (புனித பிரான்சிஸ் சேவியர் விழா), டிசம்பர் 12 (பா-டோகன் நெங்மிஞ்சா சங்மா), டிசம்பர் 19 (கோவா விடுதலை நாள்), டிசம்பர் 24 (கிறிஸ்துமஸ் மாலை), டிசம்பர் 26 (கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்), டிசம்பர் 29 (குரு கோவிந்த் சிங் பிறந்தநாள்), டிசம்பர் 30 (யு கியாங் நங்பா) டிசம்பர் 31 (புத்தாண்டு மாலை)