உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்துகிறார்கள். இதன் காரணமாக மெட்டா நிறுவனம் அடிக்கடி வாட்ஸ் அப்பில் புதுப்புது அப்டேட்டுகளை வெளியிட்டு வருகிறது. இன்ஸ்டாகிராமில் இருக்கும் அப்டேட்டுகள் கூட whatsappபில் வெளியிடப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் ஒரு புதிய அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது. அதாவது தற்போது ஆன்லைன் மோசடிகள் என்பது அதிகரித்துவிட்ட நிலையில் போட்டோக்களை மோசமாக சித்தரிப்பது பொய்யான புகைப்படங்கள் அனுப்புவது வீடியோக்கள் போன்ற மோசடி சம்பவங்கள் என்பது அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதன் காரணமாக வாட்ஸ் அப்பில் பாதுகாப்பு அம்சங்கள் அதிகரிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் தற்போது ஒரு புகைப்படம் உண்மையா அல்லது பொய்யா என்பதை எப்படி தெரிந்து கொள்வது என்ற புதிய அம்சத்தையும் மெட்டா அறிமுகப்படுத்த இருக்கிறது. அதாவது புகைப்படங்களின் உண்மைத் தன்மையை அறிய அவற்றை நேரடியாக இணையதளத்தில் தேட வழிவகை செய்யப்படும் புதிய அம்சம் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. இதற்கான சோதனை நடைபெற்று வருகிறதாம். இந்த புதிய அம்சம் சமீபத்திய பீட்டா அமைப்பில் உள்ளது. மேலும் இனிவரும் நாட்களில் அனைத்து வருஷங்களிலும் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.