“இந்த பேரழிவை எதிர்கொள்வது சாத்தியமற்றது”…. துருக்கி அதிபர் எர்டோகன் வெளியிட்ட பதிவு….!!!!

துருக்கி சிரியா எல்லையில் கடந்த 6 ஆம் தேதி காலை 4:20 மணிக்கு பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவானது. இதனால் சிரியாவிலும் துருக்கியிலும் நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமாகியது. இந்த நிலநடுக்கம் லெபனான், இஸ்ரேல், ஜோர்தான், கிரீன்லாந்து போன்ற அண்டை நாடுகளிலும் உணரப்பட்டுள்ளது. இதனை அடுத்து மீட்பு பணிகளில் துருக்கி அரசுக்கு உதவுவதற்காக இந்தியா போன்ற பல்வேறு நாடுகள் உதவிக்கரம் நீட்டி வருகின்றது. இந்த நிலையில் இன்று காலை வரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 15 ஆயிரத்தை கடந்துள்ளது.

துருக்கியில் மட்டும் 12,391 பேரும் சிரியாவில் 2992 பேரும் உயிரிழந்துள்ளனர். மேலும் 50,000க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர். இதனை அடுத்து மழை போல் குவிந்து கிடக்கும் கட்டிட இடிப்பாடுகளுக்குள் சிக்கி உள்ள மக்களை மீட்க மீட்புக் குழுவினர் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றனர். ஆனால் கடும் பனிப்பொழிவு நிலவி வருவதால் மீட்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இடுபாடுகளை தோண்ட தோண்ட மனித உடல்கள் வந்து கொண்டே இருக்கின்றது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. குறிப்பாக மீட்பு பணியின் போது எடுக்கப்பட்ட வீடியோக்களும் போட்டோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. இதனை காண்போரின் நெஞ்சம் பதைபதைக்கின்றது.

இந்த நிலையில் துருக்கியின் நிலநடுக்கம் தொடர்பான முன்னெச்சரிக்கை நட”இந்த பேரழிவை எதிர்கொள்வது சாத்தியமற்றது”…. துருக்கி அதிபர் எர்டோகன் வெளியிட்ட பதிவு….!!!!வடிக்கைகள் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் குறித்து அந்நாட்டின் அதிபரான எர்த்டோகன் மீது கடும் விமர்சனங்கள் எழுந்தது. ஏனென்றால் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அவர் நேரில் சென்று ஆய்வு செய்யாததே ஆகும். மேலும் கடும் விமர்சனத்தை தொடர்ந்து நேற்று ஹராமனராஸ் நகரில் அதிபர் எர்டோகன் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார்.