இந்த பாட்டு சூப்பரா இருக்கு… மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டிருக்கிறேன்… வைரலாகும் சூர்யாவின் ட்வீட்…!!!

நடிகர் சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் என்ஜாயி எஞ்சாமி பாடல் குறித்து பதிவிட்டுள்ளார்.

தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் சந்தோஷ் நாராயணன் இசையில் தெருக்குரல் அறிவு மற்றும் தீ இணைந்து பாடிய பாடல் என்ஜாயி எஞ்சாமி. வித்தியாசமான இசை மற்றும் காட்சிகளுடன் தீ மற்றும் தெருக்குரல் நடிப்பில் உருவான இந்தப் பாடல் யூடியூபில் வெளியானது. தற்போது இந்த பாடலுக்கு கோடிக்கணக்கான லைக்குகள் குவிந்துள்ளது. மேலும் செல்வராகவன், கார்த்திக் சுப்புராஜ், துல்கர் சல்மான் உள்ளிட்ட பல பிரபலங்கள் இந்த பாடலை பாராட்டி தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு வெளியிட்டு இருந்தனர்.

இந்நிலையில் பிரபல நடிகர் சூர்யா இந்த பாடல் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் ‘இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. காட்சிகள் மிக அழகாக இருக்கிறது . மீண்டும் மீண்டும் இந்தப் பாடலைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன் . தெருக்குரல் அறிவுக்கு எனது பாராட்டுக்கள். தீ-யின் குரல் வழக்கம்போல மெய் மறக்கச் செய்துவிடுகிறது . படக்குழுவிற்கு எனது வாழ்த்துக்கள்’ என பதிவிட்டுள்ளார்.