இந்த பணம் அதுல இருந்துதான் வந்துச்சு… வசமாக சிக்கிய வாலிபர்… அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

வாலிபர் உரிய ஆவணம் இன்றி கொண்டு சென்ற பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

கரூர் மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினர் லாலா பேட்டை பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு வந்த லோடு ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் 84 ஆயிரத்து 90 ரூபாய் பணத்தை எவ்வித ஆவணமும் இன்றி எடுத்து சென்றது தெரியவந்துள்ளது. மேலும் பறக்கும்படையினர் அவரிடம் விசாரணை நடத்தியபோது, அந்த வாலிபர் ஓந்தாம்பாடி பகுதியில் வசித்து வரும் கௌதம் எனபது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து இந்த பணம் எப்படி வந்தது என  பறக்கும்படையினர் விசாரித்தபோது, கேரளாவில் வாழக்காய் லோடு இறக்கிய பணம் என கெளதம் தெரிவித்துள்ளார். ஆனாலும் எவ்வித உரிய ஆவணம் இல்லாத காரணத்தினால் தேர்தல் பறக்கும் படையினர் பணத்தை பறிமுதல் செய்து குளித்தலை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்துள்ளனர்.