இந்த நடிகையா?… ‘படையப்பா’ படத்தில் நீலாம்பரியாக முதன் முதலில் நடிக்க இருந்தது இவர்தான்… வெளியான புதிய தகவல்…!!!

படையப்பா படத்தில் நீலாம்பரி கதாபாத்திரத்தில் முதன் முதலில் நடிக்க இருந்த நடிகை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினி நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்த திரைப்படம் படையப்பா. கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இந்த படத்தில் எந்த அளவிற்கு ரஜினியை ரசித்தர்களோ அதே அளவிற்கு வில்லி கதாபாத்திரத்தில் நடித்து அசத்திய ரம்யா கிருஷ்ணனையும் ரசிகர்கள் கொண்டாடினார்கள்.

25 Years of Friends: 25 different types of Gunther in Tamil Cinema and  Bollywood- Cinema express

இந்நிலையில் படையப்பா படத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்த நீலாம்பரி கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இந்த கதாபாத்திரத்திற்கு முதன்முதலில் தேர்வு செய்யப்பட்டவர் நடிகை சிம்ரன் . ஆனால் கால்ஷீட் இல்லாத காரணத்தினால் அவர் இந்த படத்தில் இருந்து விலகி விட்டாராம்.