“இந்த தினங்களில் எல்லாம் மது கடைகள் செயல்படாது”…. மாநில அரசின் புதிய அதிரடி அறிவிப்பு….!!!!

நாட்டில் வருகிற 26-ம் தேதி குடியரசு தின விழா கொண்டாடப்படுவதை முன்னிட்டு டெல்லியில் அனைத்து மதுபான கடைகளும் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர டெல்லியில் மேலும் 6 நாட்களுக்கு Dry Days அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு குடியரசு தினம், காந்தி ஜெயந்தி, சுதந்திர தினம் ஆகிய 3 நாட்களில் நாட்டில் மதுபான கடைகள் செயல்படுவதற்கு அனுமதி கிடையாது. இந்நிலையில் மதப் பண்டிகை நாட்களில் மதுபான கடைகள் செயல்படக்கூடாது என்பதற்காகத்தான் டெல்லி மாநில அரசு DRY DAYS அறிவித்துள்ளது.

இந்த நாட்களிலும் மதுபான கடைகள் செயல்பட முடியாது. மேலும் ஜனவரி 1-ஆம் தேதி முதல் மார்ச் 31-ம் தேதி வரையிலான Dry Day பட்டியலை கலால் துறை வெளியிட்டுள்ளது. அதன்படி ஜனவரி 26 குடியரசு தினம், பிப்ரவரி 5 குரு ரவிதாஸ் ஜெயந்தி, பிப்ரவரி 15 சுவாமி தயானந்த சரஸ்வதி ஜெயந்தி, பிப்ரவரி 18 மகா சிவராத்திரி, மார்ச் 8 ஹோலி மற்றும் மார்ச் 30 ராம நவமி போன்றவைகள் ஆகும். இந்த தினங்களிலும் மதுபான கடைகள் செயல்படுவதற்கு அனுமதி கிடையாது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.