இந்த கலர்லயும் புறா இருக்கா… ? நீங்க பார்த்து இருக்கீங்களா….? வைரலாகும் புகைப்படம்….!!

புறாக்கள் உலகம் முழுவதிலும் காணப்படும் பறவையாகும். ஆனால் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகும் புறா ஒன்று நெட்டிசன்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. ஆம் அது நாம் எப்போதும் பார்க்கும் சாம்பல் நிற புறா போன்று இல்லை. இங்கிலாந்து நாட்டின் மான்செஸ்டர் நகரில் தென்பட்ட இந்தப் புறா இளஞ்சிவப்பு நிறத்தில் உள்ளது. இதனைப் பார்த்து ஆச்சரியமடைந்த பொதுமக்கள் அந்த புறாவுக்கு இரை போட்டுள்ளனர்.

அதனை அந்த புறா சாப்பிடும் நேரத்தில் புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர். மேலும் இது குறித்து காவல்துறையினருக்கும் தகவல் தெரிவிக்க அவர்களும் சம்பவ இடத்திற்கு வந்து புறாவை பார்வையிட்டுள்ளனர். இந்த புறா இயற்கையிலேயே இந்த நிறத்தில் தான் இருந்ததா அல்லது யாரேனும் இதற்கு சாயம் பூசி விட்டார்களா என்று சமூக வலைதளத்தில் பலரும் தங்கள் சந்தேகங்களை கருத்துக்களாக பதிவிட்டு வருகின்றனர்.

Leave a Reply