இந்த கரையெல்லாம் மறைஞ்சு பளிச்சுனு மின்னும்!! எப்படி தெரியுமா?

இல்லத்து அரசிக்கு இருக்கும் பெரிய பிரச்சனைகளில் ஒன்று வீட்டின் கழிவறை. கிச்சன் என அனைத்து இடங்களிலும் படிந்திருக்கும் அழுக்குகளை சுத்தம் செய்வதுதான். அவ்வாறு சுத்தம் செய்வதற்கு விலை உயர்ந்த பொருட்கள் பயன்படுத்த வேண்டாம். வீட்டில் இருக்கும் சில பொருட்களின் உதவிகளை எளிமையான வடிவில் சுத்தம் செய்யலாம் என கூறப்படுகிறது. இது  குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

தண்ணீரில் கரைத்த பேக்கிங் சோடாவை கழிவறையில் கரை படிந்த இடத்தில் வைத்து சுத்தம் செய்தால் பளிச்சென்று சுத்தமாகும். வீட்டில் உள்ள கிருமிகளை நீக்கம் செய்ய வினிகரை பயன்படுத்தலாம். வினிகரின் எலுமிச்சை அல்லது தண்ணீரை சேர்த்து தெளித்து சுத்தம் செய்யலாம் எனக் கூறப்படுகிறது. துரு கரையை நீக்க குளிர் பானத்தை பயன்படுத்தலாம்.

இதற்கு குளிர்ப்பானத்தில் அலுமினியம் ஸ்பாயில் வைத்து துருவை சுத்தம் செய்யவும். சமையலறை, குளியல் அறையில் அடிக்கடி துர்நாற்றம் வீசும். அதைப்போக்க எலுமிச்சம் சாற்றை பேக்கிங் சோடாவில் பயன்படுத்தலாம். மேலும் சிலிண்டர் மாதிரியான இரும்பு கரையை நீக்க பற்பசையை பயன்படுத்தவும்.

தரையை பளபள என மாற்றி மெருகூட்ட  நைட்ரஜன் பராஹாக்சைடு பயன் படுத்தலாம் என சொல்லப்படுகிறது. இந்த நிலையில் இவை அனைத்தையும் பாதுகாப்பாக கையாள வேண்டும். அது மட்டுமல்லாமல் இது போன்ற செயல்களை ஈடுபடும் பொழுது குழந்தைகளை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.