“இந்த உண்டியல் எனக்கு விலைமதிப்பில்லாதது”… ராகுல் காந்தி வெளியிட்ட ட்வீட் பதிவு…!!!!!

மத்திய பிரதேசத்தில் பாதயாத்திரை மேற்கொண்டுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியுடன் நேற்று யாஷ்ராஜ் பார்மர் என்ற சிறுவனும் பாதிரியாத்திரை சென்றுள்ளார். அப்போது அந்த சிறுவன் ராகுல் காந்தியிடம் “எல்லோரையும் அரவணைத்து செல்வதால் உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும்” எனக் கூறி பெற்றோர் தினமும் வழங்கும் பணத்தில் தான் சேமித்து வைத்த உண்டியலை அவரிடம் வழங்கியுள்ளான்.  நடைபயண செலவுக்கு இந்த பணத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறு கூறியுள்ளான். ராகுல் காந்தி  தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோவை ஒன்றை  வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில் இந்த உண்டியல் எனக்கு விலைமதிப்பில்லாதது, எல்லையில்லா அன்பின் பொக்கிஷம் எனவும் தியாகமும், சுயநலமின்மையும் குழந்தை பருவத்தில் உருவாக்கப்பட்டுள்ள நல்ல பண்புகள் எனவும் தெரிவித்துள்ளார்.