“இந்த ஆப்களுக்கு உரிமம் பெறுவது கட்டாயம்”….. மத்திய அரசு புதிய அதிரடி….!!!!

மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம், புதிய வரைவு தொலைதொடர்பு மசோதா 2022 ஐ உருவாக்கி உள்ளது. அந்த மசோதா பொதுமக்களிடம் கருத்து பெறுவதற்காக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் கருத்து தெரிவிக்க அக்டோபர் 2ஆம் தேதி வரை கடைசி நாளாகும். பொதுமக்கள் கருத்து தெரிவிக்குமாறு மத்திய தொலைதொடப்புத்துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தன சமூக வலைதளத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார். வரைவுத் தொலைத் தொடர்பு மசோதாவில் உள்ள முக்கிய அம்சங்கள் பற்றி காண்போம். ஓ.டி.டி நிறுவனமான whatsapp, ஜூம், கூகுள் டியோ போன்றவை இணைய அழைப்பு மற்றும் இணைய செய்தி அனுப்பூம் சேவைகளை வழங்கி வருகிறது.

எனவே மேற்கண்ட நிறுவனங்கள் இந்தியாவில் இயங்குவதற்கு உரிமம் பெற வேண்டும். அதனை தொடர்ந்து தொலை தொடர்பு நிறுவனங்களோ அல்லது இணைய சேவை நிறுவனங்களோ தங்களது உரிமையை திரும்ப ஒப்படைத்தால் அவற்றுக்கு கட்டணம் திருப்பி தரப்படும். அந்த நிறுவனங்களுக்கு நுழைவு கட்டணம், உரிமை கட்டணம், பதிவு கட்டண, அபராதம், கூடுதல் கட்டணம், பகுதி அளவுக்கோ அல்லது முழுமையாகவோ தள்ளுபடி செய்யவும் மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும் மத்திய அரசு அல்லது மாநில அரசில் அங்கீகரிக்கப்பட்ட பத்திரிகையாளர் இந்தியாவில் வெளியிடுவதற்காக அளித்த பத்திரிகை செய்திகள், இடமறித்து ஆய்வு செய்வதிலிருந்து விலக்கு அளிக்கப்படும். ஆனால் தேச பாதுகாப்பு, பொது பாதுகாப்பு, இறையாமை ஆகியவை சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் இந்த விலக்கு பொருந்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *