இந்திய ராணுவ பயிற்சியில் பயங்கர விபத்து..! தவறாக செலுத்தப்பட்ட ஏவுகணை…வீரர்கள் கதி என்ன..?

ராஜஸ்தானில் உள்ள துப்பாக்கி சூடு தளத்தில் இருந்து மூன்று வான் ஏவுகணைகளை இந்திய ராணுவம் தவறாக செலுத்தியது அந்த பகுதியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அங்கே துப்பாக்கி சூடு பயிற்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது திடீரென்று தொழில்நுட்ப கோளாறால் இந்திய ராணுவம் நடத்திய துப்பாக்கி சூடு பயிற்சியின்போது மூன்று வான் ஏவுகணைகள் தவறாக செலுத்தப்பட்டன.

மேலும் 3 ஏவுகணைகளும் எல்லைக்கு வெளியே சென்று வெவ்வேறு கிராமங்களில் உள்ள வயல்களில் தாக்கியது. இதனால் அந்த கிராமங்களில் பரபரப்பு ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக எந்த உயிர் சேதமும் ஆகவில்லை என கூறப்படுகிறது. ராணுவ பயிற்சியின் போது ஏவுகணைகள் தவறாக செலுத்தப்பட்டதாகவும் ராணுவ செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பான விசாரணை தொடங்கப்பட்டு அதன் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.