பஞ்சாப் மாநிலம் லூதியானாவை சேர்ந்த குராசிஸ் சிங் முதல்நிலைப் பட்டம் பயில கனடாவில் உள்ள கல்லூரி ஒன்றில் சேர்ந்துள்ளார். இவர் கிராஸ்லி ஹன்டர் என்ற நபருடன் ரூமை பகிர்ந்து கொண்டார். சம்பவத்தன்று குராசிஸ் சிங் மற்றும் கிராஸ்லி ஹன்டர் இடையே சமையலறையில் வைத்து வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கிராஸ்லி ஹன்டர் குராசிஸ் சிங்கை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். காவல்துறையினர் சமையலறையில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது தான் கத்தியால் குத்தி கொன்றதாக தெரிவித்துள்ளனர். ஆனால் அவரது தந்தை தங்களது மகன் தூங்கிக் கொண்டிருந்தபோதுதான் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.
கிராஸ்லி ஹன்டர் போதையில் இருந்தாரா என்பதை கனடா காவல்துறையினர் கண்டறிய வேண்டும் மேலும் கனடா காவல்துறையினர் மீது தங்களுக்கு முழு நம்பிக்கை இருப்பதாகவும் கூறியுள்ளார்.