இந்திய தடுப்பூசிக்கு தடை.. அதிரடியாக அறிவித்த நாடு.. இது தான் காரணமா..?

இந்தியாவின் தயாரிப்பான கோவாக்சின் தடுப்பூசியை பிரேசிலில் இறக்குமதி செய்ய அந்நாட்டின் சுகாதாரத்துறை தடை விதித்திருக்கிறது.  

கொரோனா உலக நாடுகள் முழுவதையும் அச்சுறுத்திவந்தது. அதன் பிறகு ஒரு வழியாக கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசியை இந்தியா, ரஷ்யா, பிரிட்டன் போன்ற நாடுகள் கண்டுபிடித்துவிட்டன. எனினும் சில வகையான தடுப்பூசிகள் கடுமையான பக்க விளைவுகளை உண்டாக்குவது கண்டறியப்பட்டது.

இந்நிலையில் இந்தியாவிலும் பாரத் பயோடெக் நிறுவனம் கோவேக்சின் தடுப்பூசியை தயாரித்தது. மேலும் கோவேக்ஸின் மற்றும் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் கோவிஷீல்டு தடுப்பூசிகளை அவசரகால உபயோகத்திற்காக ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும் இந்தியா மனிதாபிமானத்தின் அடிப்படையில் இந்த தடுப்பூசிகளை தங்கள் அண்டை நாடுகளுக்கும்  இலவசமாக அனுப்பிவைத்தது.

இதனிடையே பிரேசில் கோவாக்சின் மருந்து 2 கோடி வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்திருந்தது. ஆனால் பிரேசில் தேசிய சுகாதாரத்துறை கோவாக்சின் தடுப்பூசியை இறக்குமதி செய்வதற்கு திடீர் தடை விதித்து விட்டது. இதற்கு காரணமாக தடுப்பூசி உரிய பாதுகாப்பில் தான் தயாரிக்கப்பட்டது என்பதை நிரூபிக்கும் அதிகாரபூர்வ ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை என்று கூறிவிட்டது.

எனினும் பயோடெக் நிறுவனம் பிரேசில் சுகாதார அமைப்பு குறிப்பிட்ட காரணங்களை உடனடியாக சரிசெய்வோம் என்று தெரிவித்துள்ளது. மேலும் இதற்குரிய கால அவகாசம் தொடர்பாக பிரேசிலுடன் சேர்ந்து கலந்து ஆலோசித்து வருகிறோம் என்றும் இந்த பிரச்சனை விரைவாக தீர்க்கப்பட்டு விடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.