இந்திய கிரிக்கெட் அணியின் வேகப் பந்துவீச்சாளர் முகமது சிராஜ், அவரது விளையாட்டு சாதனைகளைப் பாராட்டி, தெலுங்கானா அரசு அவருக்கு டெப்யூட்டி சூப்பிரிண்டென்ட் ஆஃப் போலீஸ் (DSP) பதவியை வழங்கியுள்ளது. இவர் ஹைதராபாதில், தெலுங்கானா மாநில டைரக்டர் ஜெனரல் ஆஃப் போலீஸ் (DGP) அலுவலகத்தில் கடமையைத் தொடங்கினார். இந்நிகழ்ச்சியில், சிராஜ் மாநில அரசின் குழு-I நிலை அரசு பதவியைப் பெற்றார். தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி அவருக்கு இந்த கௌரவத்தை வழங்குவதாக முன்னரே உறுதிப்படுத்தியிருந்தார்.
சிராஜின் வாழ்கையில் மிகவும் கஷ்டப்பட்டு பல இன்னல்களை கடந்து .. விடாமுயற்சியால் இன்று தேசிய கதாநாயகமாக உருவெடுத்ததைச் காட்டுகிறது. உலக கிரிக்கெட்டில் மட்டுமின்றி, தற்போது மாநில பொது சேவையிலும் சிறந்த இடத்தைப் பிடித்துள்ளார். சிராஜ் அவரது புதிய பொறுப்புடன் தொடர்ந்து கிரிக்கெட்டில் ஈடுபடுவார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.