அரசியல் பரபரப்புகளுக்கிடையில் இன்று தமிழக சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது. ஆளுநர் உரையுடன் அவை தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று சட்டப்பேரவையில் உரையாற்றிய ஆளுநர் அரசு தயாரித்த உரையை வாசிக்காமல் தவிர்த்தார். இதனால் ஆளுநரை சபாநாயகர் அப்பாவு விமர்சித்தார்.

இதனால் பாதியிலேயே அவையிலிருந்து ஆளுநர் ரவி வெளியினார். இதைத்தொடர்ந்து தற்போது பிரபல சமூக வலைதளமான X இல் #Get out Ravi என்ற ஹாஸ்டக் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் முதல் இடத்தில் உள்ளது.