நாடாளுமன்ற மக்களவையில் தேசிய சிறுபான்மையினர் அலுவலகத்திற்கு வரும் புகார்கள் தொடர்பாக எம்.பி ரவிக்குமார் கேள்வி எழுப்பினார். அதற்கு மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி பதில் அளித்தார். அவர் கூறியதாவது, தேசிய சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் நடப்பாண்டில் கடந்த மாதம் வரை 1984 புகார்கள் பெறப்பட்டுள்ள நிலையில், 1279 புகார்கள் முஸ்லிம்களிடமிருந்து வந்தவை ஆகும். உத்திரபிரதேச மாநிலத்தில் தான் சிறுபான்மையினரிடம் இருந்து அதிக அளவில் புகார்கள் வந்துள்ளது. அதற்கு அடுத்த இடத்தில் டெல்லி இருக்கிறது. ஆனால் புகார்கள் மீது என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்ற விவரத்தை அமைச்சர் தெரிவிக்கவில்லை. அதன் பிறகு தமிழ்நாட்டை பொறுத்தவரையில் கணிசமான அளவுக்கு புகார்கள் பெறப்பட்டுள்ளது.
அதன்படி நடப்பாண்டில் ஜனவரி மாதம் வரை சிறுபான்மையினரிடம் இருந்து மொத்தம் 39 புகார்கள் பெறப்பட்டுள்ள நிலையில், முஸ்லிம்களிடமிருந்து 10 புகார்களும் கிறிஸ்தவர்களிடமிருந்து 23 புகார்களும் பெறப்பட்டுள்ளது. இந்திய அளவில் கடந்த 2 வருடங்களாக சிறுபான்மையினரிடமிருந்து வரும் புகார்கள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் குறைந்த அளவுக்கு சிறுபான்மையினரிடமிருந்து புகார்கள் பெறப்பட்டுள்ளது. தமிழகத்தில் முஸ்லிம்களிடமிருந்து வரும் புகார்களை விட கிறிஸ்தவர்களிடம் இருந்து வரும் புகார்கள் தான் அதிகமாக இருக்கிறது. மேலும் இந்திய அளவில் கிறிஸ்தவர்களிடமிருந்து ஒட்டுமொத்தமாக பெறப்பட்ட புகார்கள் 100 முதல் 150-குள் இருக்கும் நிலையில் 15 முதல் 20% புகார்கள் தமிழ்நாட்டில் இருந்து தான் சென்றுள்ளது என்று கூறினார்.