இந்திய அணியின் தலைமை பயிற்சிகளாக இருக்கும் ராகுல் டிராவீட்டின் பதவிக்காலம் ஐசிசி டி20 உலக கோப்பை போட்டியுடன் நிறைவடையும் நிலையில் அடுத்த தலைமை பயிற்சியாளராக கம்பீர நியமிக்க பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் கம்பீரை இந்திய அணியின் தலைமை பயிற்சிளாக பிசிசிஐ நியமித்தால் என்ன நடக்கும் என்பது குறித்து சஞ்சய் பரத்வாஜ் கூறியுள்ளார்.

இவர் கம்பீரின் சிறு வயது பயிற்சியாளர் ஆவார். அவர் பேசியதாவது, என்னுடைய மாணவர் ஒருவர் இந்திய அணியின் பயிற்சியாளராக மாறினால் எனக்கு அது மிகவும் பெருமை. அதன் பிறகு கம்பீர் இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டால் நிச்சயம் இந்திய அணி உலக கோப்பையை வெல்லும் என்பதில் சந்தேகம் இல்லை. ஏனெனில் அவர் வீரர்களின் திறமையை வெளிக் கொண்டு வந்து அவர்களுக்கு புதிய உத்வேகத்தை கொடுப்பார். மேலும் நடப்பு தொடரில் இந்திய அணி சிறப்பாக விளையாடி வருவதால் உலக கோப்பையை வெல்வதற்கான வாய்ப்பு அதிக அளவில் இருப்பதாக கூறினார்.