இந்தியில் ரீமேக் ஆகும் “லவ் டுடே”… ஹீரோ, ஹீரோயினி யார் தெரியுமா?…. லீக்கான தகவல்….!!!!!

தமிழ் சினிமாவில் பிரதீப் ரங்கநாதன் டைரக்டு செய்து கதாநாயகனாக நடித்த”லவ் டுடே” படம் வசூல் சாதனை நிகழ்த்தி திரையுலகினரை ஆச்சரியப்படுத்தியது. இப்படம் காதல் ஜோடி செல்போனை மாற்றிக்கொள்வதால் ஏற்படும் பிரச்சனைகளை மையமாக கொண்டு தயாராகி இருந்தது. வசூலில் சாதனை நிகழ்த்திய இந்த படத்தில் நாயகியாக இவானா வந்தார்.

அதோடு சத்யராஜ், ராதிகா, யோகிபாபு போன்றோரும் நடித்திருந்தனர். லவ் டுடே திரைப்படம் இந்தியில் ரீமேக் ஆக இருக்கிறது. அதன்படி லவ் டுடே இந்தி ரீமேக்கில் நடிப்பதற்கு நாயகனாக இந்தி நடிகர் அமீர்கான் மகன் ஜுனைத் கானையும், நாயகியாக நடிக்க மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் 2-வது மகள் குஷி கபூரையும் தேர்வு செய்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருவரும் இப்படத்தில் காதலர்களாக நடிக்கின்றனர்.

Leave a Reply