இந்தியில் பணிபுரியாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்… அமித்ஷா குழு பரிந்துரை.!!

இந்தியில் பணிபுரியாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என அமித்ஷா தலைமையிலான அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழு தெரிவித்துள்ளது.

அனைத்து ஒன்றிய அரசு அலுவலகங்களிலும், அனைத்து பணிகளும் இந்தியிலேயே நடைபெற வேண்டும் என்று அமித்ஷா குழு தெரிவித்துள்ளது. அதாவது, இந்தியில் பணிபுரியாத அதிகாரிகளுக்கும், ஊழியர்களுக்கும் எச்சரிக்கை விடுப்பதுடன் விளக்கம் அளிக்க நோட்டீஸ் தர வேண்டும். திருப்திகரமான பதில் தராத ஒன்றிய அரசு ஊழியர்களின் தனிப்பதிவேட்டில் இந்தியில் பணிபுரியவில்லை என்பதை பதிவு செய்ய பரிந்துரை செய்துள்ளது. மேலும் அரசு பணிக்கு தேர்ந்தெடுக்கும்போதே இந்தி மொழி அறிவு இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்ய அமித்ஷா குழு பரிந்துரை செய்துள்ளது.