இந்தியாவை மிரட்டுது…! என்ன செய்யலாம் ? இன்று முக்கிய முடிவு …!!

கொரோனா பரவல் 2ஆம் அலை பரவல் குறித்து இன்று மத்திய சுகாதார துறை அமைச்சர் மாநில அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்துகின்றார்.

நாடு முழுவதும் கொரோனா பரவல் 2வது அலை தொடங்கியுள்ள நிலையில் மாநில சுகாதார துறை அமைச்சருடன் மத்திய சுகாதார துறை அமைச்சர் ஹர்சவரதன் இன்று ஆலோசனை நடத்தவுள்ளார். இதில் தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களை சேர்ந்த சுகாதார துறை அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர். இந்தியா முழுவதும் தணிந்திருந்த கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது.

தினசரி பாதிப்பு 1 லட்சத்தை தாண்டியுள்ளது. இந்நிலையில் மத்திய சுகாதார துறை அமைச்சர் ஹர்சவரதன் கொரோனா பரவல் குறித்து மாநில சுகாதார துறை அமைச்சர்களுடன் இன்று  ஆலோசனை நடத்த உள்ளார். தமிழ்நாடு உட்பட 11 மாநிலங்கள் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த சுகாதார துறை அமைச்சர்கள் இதில் பங்கேற்க உள்ளனர்.