டெல்லியில் விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம், விவசாய கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்ற பிப்ரவரி 13ஆம் தேதி விவசாயிகள் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர். இதனால் டெல்லி மற்றும் உத்திர பிரதேசமாகிய மாநிலங்களுக்கு இடையே உள்ள எல்லைகள் மற்றும் வடக்கு மாவட்டத்தின் அதிகார வரம்புக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் யாரும் ஒன்று சேரக்கூடாது என்று காவல்துறை உத்தரவை பிறப்பித்துள்ளது.

அதேசமயம் விவசாயிகளின் போராட்டத்தை முன்னிட்டு டெல்லி எல்லையில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து போராட்டம் நடைபெறும் என்று அசம்பாவிதங்களை தடுப்பதற்காக சட்டம் ஒழுங்கை பாதுகாக்க காவல்துறை சார்பில் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உத்திரபிரதேசத்தில் இருந்து டெல்லிக்கு வரும் டிராக்டர்கள், தள்ளுவண்டிகள் மற்றும் பேருந்துகள் உள்ளிட்ட பல வாகனங்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. டெல்லி எல்லையை சுற்றியும் பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.