இந்தியாவை உலுக்கிய கோரமண்டல் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு, சம்பளத்தின் ஒரு பகுதியை எம்பிக்கள் வழங்க வேண்டும் என்று வருண் காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். ஒடிசா ரயில் விபத்து இதயத்தை பிளக்கும் சம்பவம். இந்த துயரத்தால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருடன் மக்கள் உறுதியாக நிற்க வேண்டும். எம்பிக்கள் சம்பளத்தின் ஒருபகுதியை வழங்க முன்வர வேண்டும் என கூறியுள்ளார்.

ஒடிசா கோரமண்டல் எக்ஸ்பிரஸ் விபத்து நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் 294 பேர் உயிரிழந்த நிலையில் 900க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 200 க்கும் மேற்பட்டோர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.