“இந்தியாவுடனான நல்லுறவை நாங்கள் மதிக்கிறோம்”… பிரபல நாட்டு பாதுகாப்பு கவுன்சில் அமைப்பாளர் கருத்து…!!!!!!

உக்ரைன் மீது போர் தொடுத்தால் ரஷ்யா மீது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பொருளாதார தடைகளை விதித்துள்ளது. அதனை மீறி இந்தியா தொடர்ந்து ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய்யை தள்ளுபடி விலையில் வாங்கி வருகிறது. இதனால் இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியில் சவுதி அரேபியாவை பின்னுக்கு தள்ளி ரஷ்யா இரண்டாவது இடத்தை பெற்று முன்னேறி இருக்கிறது.

இந்த நிலையில் அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை பாதுகாப்பு கவுன்சில் அமைப்பாளர் ஜான் கிர்பி பேசியபோது, இந்த பசுபிக் பிராந்தியத்தில் அமெரிக்காவின் மிக முக்கிய கூட்டாளியாக இந்தியா செயல்பட்டு வருகிறது. இந்தியாவுடனான பரஸ்பர நல்லுறவிற்கு  அமெரிக்கா எப்போதும் மதிப்பளித்து வருகின்றது. மேலும் ஒவ்வொரு நாட்டிற்கும் இறையாண்மையை காப்பதிலும் சொந்த முடிவுகளை எடுப்பதிலும் சுதந்திரம் இருக்கிறது. ரஷ்யா மீது சர்வதேச அளவில் அதிக நெருக்கடி கொடுக்க வேண்டும் என்பதே அமெரிக்காவின் நோக்கமாகும். இந்த நிலையில் ரஷ்ய அதிபர் புதின் தன் செயலுக்கு தக்க விளைவுகளை சந்திக்க நேரிடும் என கூறியுள்ளார்.