இந்தியாவுக்கு மோடி, மகாராஷ்டிரத்துக்கு ஏக்நாத் ஷிண்டே என மகாராஷ்டிரா அரசு சார்பாக அளிக்கப்பட்டிருக்கும் முழு விளம்பரம் தான் இன்று மிக முக்கிய அரசியல் சார்பு பேசுபொருளாகி இருக்கிறது. இந்த விளம்பரத்தை பார்த்த பலரும் ஏக்நாத் ஷிண்டேன் அடுத்த அதிரடி துவங்கிவிட்டதாக கருதுகின்றனர்.

முதல் பக்கத்தில் வெளியாகிய அந்த விளம்பரத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படமும், மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் புகைப்படமும் இடம்பெற்று உள்ளது. அதோடு மகாராஷ்டிர மக்கள் முதல்வர் பதவியில், பட்னவீஸை விடவும் ஏக்நாத் ஷிண்டே இருப்பதையே அதிகம் விரும்புவதாகவும் ஒரு ஆய்வு முடிவு என தகவல் பதிவிடப்பட்டுள்ளது. இந்த விளம்பரத்தில் தேவேந்திர ஃட்னவீஸ் புகைப்படம் இடம்பெறாமல் போயிருப்பது அவரது தொண்டர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.