இந்தியாவுக்கு இரண்டாவது தலைநகரம் தேவை என்று மகாராஷ்டிர முன்னாள் ஆளுநர் வித்யாசாகர் ராவ் முக்கிய கருத்துகளை தெரிவித்ததை தொடர்ந்து நாட்டின் இரண்டாவது தலைநகராக வருவதற்கான அனைத்துத் தகுதிகளும் ஐதராபாத்திற்க்கு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு இரண்டாவது தலைநகரம் தேவை என்று அரசியல் சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் முன்னதாக அம்பேத்கர் கூறினார்.

இந்நிலையில் ஹைதராபாத் நாட்டின் இரண்டாவது தலைநகராக மாறும் என்பதில் நம்பிக்கை உள்ளது என்று வித்யாசாகர் ராவ் கூறினார். இது தொடர்பாக அனைத்து அரசியல் கட்சிகளும் இணைந்து பேசி முடிவெடுக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.