இந்தியாவுக்கு ஆதரவு… “அவர் கிட்ட ஏன் ஜோதியை கொடுத்தீங்க”… கொந்தளித்த அமெரிக்கா..!!

ஒலிம்பிக் ஜோதி விவகாரத்தில் இந்தியாவிற்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கியுள்ளது .

கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் 15ஆம் தேதி கிழக்கு லடாக் எல்லையில் உள்ள  கல்வான்  பள்ளத்தாக்கில் இந்திய – சீன ராணுவத்திற்கு  இடையே நடைபெற்ற  மோதலில் இந்திய  தரப்பில் 20 ராணுவ  வீரர்கள்  வீரமரணம் அடைந்துள்ளனர். மேலும்  சீன தரப்பில் 4 வீரர்கள் உயிரிழந்திருக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

இச்சம்பவம் இரு நாடுகளுக்கு இடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது . மேலும் உலக நாடுகளுக்கு இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது . இதையடுத்து  இரு தரப்பு நாடுகளும் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினையை தீர்க்க முற்பட்டு வருகிறது.

இந்நிலையில் சீனாவில் நடைபெற உள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்காக அங்கு ஒலிம்பிக் ஜோதி வந்தடைந்தது.இதனை தொடர்ந்து  கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த  சண்டையின் போது  காயமடைந்த சீன ராணுவ அதிகாரி அந்த ஒலிம்பிக் ஜோதியை ஏந்தி சென்றது உலக நாடுகளுக்கிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு எதிர்ப்பு  தெரிவித்த  அமெரிக்கா இது பெரும் வெட்கக்கேடான நிகழ்வு  என குறிப்பிட்டுள்ளது.

மேலும்  இது குறித்து  அமெரிக்க செனட் சபையின் வெளியுறவு கமிட்டி  உறுப்பினரான  ஜிம்  ரிஷ்  தனது ட்விட்டர் பக்கத்தில், 2020ல் இந்தியாவை தாக்கி உய்குர் இன மக்களுக்கு எதிராக இனப்படுகொலையை நடத்திய ராணுவ படையின் தளபதி பெய்ஜிங்  2022 ஒலிம்பிக் ஜோதியை ஏந்த தேர்வு செய்தது  வெட்கக்கேடான நிகழ்வு. மேலும்  உய்குர்   இன மக்களின் சுதந்திரம் மற்றும் இந்தியாவின் இறையாண்மைக்கு  அமெரிக்கா தொடர்ந்து ஆதரவளிக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஒலிம்பிக்கில் ஷார்ட் டிராக்  ஸ்பீட் ஸ்கேட்டிங் போட்டியில் நான்குமுறை சீனாவிற்க்காக  பதக்கம் வென்ற  வாங் மெங்   குளிர்கால ஒலிம்பிக் ஜோதியை முதலில் ஏந்திச் சென்றார். அதன்பின்னர் சீன ராணுவத்தின்  படைத்தளபதியான சின்ஜியாங் பெற்றுக்கொண்டார்.