இந்தியாவில் 85 தினங்களில் 10 கோடி பேருக்கு தடுப்பூசி…!!!

நாடு முழுவதும் 10 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தபட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இந்த இலக்கை எட்ட 85 தினங்களே ஆனதால் குறைந்த தினங்களில் 10 கோடி பேருக்கு தடுப்பு செலுத்திய நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.

நாடு முழுவதும் கடந்த ஜனவரி 16ம் தேதி கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. முதற்கட்டமாக முன்கள பணியாளர்களுக்கும், அதனைத் தொடர்ந்து 60 வயதிற்கு மேற்பட்டோர் மற்றும் 45 வயது மேற்பட்ட இணை பாதிப்புகள் உள்ளவர்களுக்கும், தற்போது 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் என தடுப்பு செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி நேற்று இரவு 7.30 மணி வரை நாடு முழுவதும் 10,12,84,882 பேருக்கு கொரோனா  தடுப்பு ஊசி செலுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. 85 தினங்களில் இந்த இலக்கை எட்டியதால் விரைவாக 10 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்ட நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. அமெரிக்காவில் 89 தினங்களிலும் சீனாவில் 102 தினங்களிலும் 10 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *