இந்தியாவில் 1 கோடியைத் தாண்டியது கொரோனா பரிசோதனை …!!

இந்தியாவில் இதுவரை ஒரு கோடிக்கும் அதிகமான கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என ஜிஎம்ஆர்  தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை 6 லட்சத்து 97 ஆயிரத்து 413 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அதே நேரத்தில் பரிசோதனைகளை அதிகரிக்க மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது. ஒவ்வொரு மாநிலத்திலும் பரிசோதனைகளை தினமும் அதிகரிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக மகராஷ்டிரா, தமிழகம், டெல்லி உள்ளிட்ட மூன்று மாநிலங்களில் கொரோனா வைரஸ் பரிசோதனை என்பது தினமும் 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில்தான் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இன்றைய தினம் காலை நிலவரப்படி இந்தியாவில் ஒரு கோடிக்கும் அதிகமான கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், சரியாக ஒரு கோடியே 4 ஆயிரத்து 101 பரிசோதனை இன்று காலை 11 மணி நிலவரப்படி மேற்கொள்ளப்பட்டது என்றும், தினமும் இரண்டு லட்சத்து ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், நாளுக்கு நாள் இந்த எண்ணிக்கை அதிகப்படுத்தப்படும் என்றும் தன்னுடைய அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *