விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்க டெல்லி தீர்ப்பாயம் மறுத்துள்ளது. ராஜீவ் காந்தி படுகொலைக்கு பின் இந்தியாவில் அந்த அமைப்பிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையை மேலும் 5 வருடங்களுக்கு நீட்டித்து கடந்த மே மாதம் 14ஆம் தேதி மத்திய அரசு உத்தரவிட்டது. அந்த உத்தரவை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் விடுதலைப்புலிகள் மீதான தடையை தீர்ப்பாயம் உறுதி செய்தது.