இந்தியாவில் பிப்ரவரி 28 ஆம் தேதி வரை நீட்டிப்பு…. மத்திய அரசு திடீர் அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. அதுமட்டுமல்லாமல் உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் அதிவேகமாக இந்தியாவில் பரவி வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி சர்வதேச பயணிகள் விமானங்களுக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டது.

கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் தடை நீட்டிக்கப்பட்டு வருகிறது. தற்போது கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருவதால் சர்வதேச பயணிகள் விமானங்களுக்கான தடையை பிப்ரவரி 28-ம் தேதி வரை நீட்டித்து மத்திய பயணிகள் விமான போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *