இந்தியாவில் உள்ள 124 விமான நிலையங்களில் சென்னையில் உள்ள மீனம்பாக்கம் விமான நிலையம் தான் அதிக அளவு நஷ்டத்தில் இயங்கி வருவதாக மத்திய அரசு அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற மாநிலங்களவையில் 2021-22 ஆம் நிதி ஆண்டில் விமான நிலையங்களின் வருமானம் குறித்து ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த நீரஜ் டங்கி என்பவர் எழுப்பிய கேள்விக்கு மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை இணை அமைச்சர் வி.கே சிங் பதிலளித்தார். அப்போது இந்தியாவிலேயே அதிக நஷ்டத்தில் இயங்கி வரும் விமான நிலையம் சென்னையில் உள்ள மீனம்பாக்கம் விமான நிலையம் தான் என்றும், 189.85 கோடி வரை நஷ்டம் அடைந்துள்ளதாகவும் கூறினார்.

இந்த விமான நிலையம் 2021-22ஆம் தேதி ஆண்டில் 278.63 கோடி வரை நஷ்டம் அடைந்துள்ளது. இதேபோன்று தமிழகத்தில் உள்ள மற்ற விமான நிலையங்களும் நஷ்டத்தில் தான் இயங்கிக் கொண்டிருக்கிறது. அதன்படி மதுரை ஏர்போர்ட் ரூ. 41.20 கோடியும், கோவை ஏர்போர்ட் ரூ. 28.51 கோடியும், திருச்சி ஏர்போர்ட் ரூ. 19.17 கோடியும், தூத்துக்குடி ஏர்போர்ட் ரூ. 13.97 கோடியும், புதுச்சேரி ஏர்போர்ட் ரூ. 12.36 கோடியும், சேலம் ஏர்போர்ட் ரூ. 5.61 கோடியும் நஷ்டத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

இதன் காரணமாக தமிழ்நாட்டில் உள்ள விமான நிலையங்களை லாப நோக்கில் கொண்டு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் மிகவும் பிசியான விமான நிலையமாக இருக்கும் சென்னை மீனம்பாக்கம் சர்வதேச விமான நிலையம் இந்தியாவிலேயே நஷ்டத்தில் செயல்பட்டு வரும் ஏர்போர்ட்டில் முதலிடத்தில் இருப்பது மிகவும் வேதனைக்குரிய ஒரு விஷயமாக பார்க்கப்படுகிறது.