இந்தியாவில் ஆண்டுதோறும் ஜனவரி 14-ம் தேதி முன்னாள் ஆயுதப்படை வீரர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் நடப்பாண்டும் இன்று முன்னாள் ஆயுதப்படை வீரர்கள் தினம் கொண்டாடப்பட்டது. இந்த தினத்தை முன்னிட்டு டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவுச் சின்னத்தில் இன்று ராணுவ தலைமை தளபதி மனோஜ் பாண்டே உள்ளிட்ட பல இராணுவ அதிகாரிகள் மரியாதை செலுத்தினர்.

அதன் பிறகு ராணுவ தளபதி மனோஜ் பாண்டே செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களின் நலனுக்காக முன்னாடி கார்ப்பரேட் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது என்று கூறினார். மேலும் இந்த அறிவிப்பு முன்னாள் ராணுவ வீரர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.