இந்தியாவில் ஒரே நாளில் 11.71 லட்சம் பேருக்‍கு கொரோனா பரிசோதனை…!!!

நாடு முழுவதும் 16 கோடிக்கும் அதிகமானோருக்கு  கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரனா வைரசால் பாதிக்கப்பட்டோரின்  எண்ணிக்கை ஒரு கோடியே தாண்டியுள்ளது. வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் பட்டியலில் மகாராஷ்டிரா தொடர்ந்து முதலிடத்திலும், கர்நாடகா இரண்டாவது இடத்திலும், ஆந்திரா மூன்றாம் இடத்திலும்,  தமிழகம் 4வது இடத்திலும் உள்ளன.

இந்நிலையில் ஒட்டுமொத்தமாக அனைத்து  மாநிலங்களிலும் நேற்றுவரை 16 கோடியே 90 ஆயிரத்து 514 பேரின்  இரத்த மாதிரிகள்  கொரோனா வைரஸ் தொற்றுக்காக  பரிசோதிக்கப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்  தெரிவித்துள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 11 லட்சத்து 71 ஆயிரத்து 868 பரிசோதனைகள் மேற் கொள்ளபட்டதாக   தெரிவிக்கபட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *