இந்தியாவில் பல்வேறு ஊழியர்கள் நடப்பு ஆண்டில் தங்கள் வேலையை விட்டு வேறு வேலைக்கு மாறுவதற்கு திட்டமிட்டுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. அதாவது தொழில்முறை சமூக சேவை வலைதளமான LinkedIn நிறுவனம் ஒரு ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வின் முடிவில் 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தை ஒப்பிடும்போது கடந்த வருடம் டிசம்பர் மாதத்தில் இந்தியாவில் ஆட்சேர்ப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது. அதன்பிறகு ஐந்தில் நான்கு பேர் அதாவது 80 சதவீதம் ஊழியர்கள் தங்கள் வேலையை மாற்றுவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் 2022-ம் ஆண்டில் நவம்பர் 30-ஆம் தேதி முதல் டிசம்பர் 2-ம் தேதி வரை 18 வயது அல்லது அதற்கு மேற்பட்ட 2007 பணியாளர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் தான் இந்த தகவல் தெரிய வந்துள்ளது. 18 வயது முதல் 24 வயதுக்கு உட்பட்ட ஊழியர்களில் 88 சதவீதம் பேரும், 45 முதல் 54 வயதிற்கு உட்பட்ட 88% ஊழியர்களும் வேலை மாற்றம் குறித்த எண்ணத்தில் இருக்கிறார்களாம். மேலும் நல்ல சம்பளம் கிடைக்கும் வேலைக்கு மாற வேண்டும் என்பதுதான் பெரும்பாலானவரின் எண்ணமாக இருப்பதாகவும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது.