இந்திய விமானப் படையின் மிகவும் வயதான பைலட்டான தலீப் சிங் மஜிதியா தனது 103ஆவது வயதில் நேற்று காலமானார். 1920ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் தேதி சிம்லாவில் பிறந்த இவர், இரண்டாம் உலகப் போரின் போது 1940ஆம் ஆண்டு இந்திய விமானப்படையில் இணைந்தார். 1941ஆம் ஆண்டு சென்னையில் கடலோர ரோந்து பாதுகாப்பு பணியில் பணியாற்றியுள்ளார். 1949ஆம் ஆண்டு காத்மாண்டுவில் முதல் விமானத்தை தரையிறக்கிய பைலட் என்ற பெருமை இவரையே சேரும்.